Home /tiruppur /

நெசவாளர்களே.. குறைதீர் மையத்தை அணுகி உதவி பெறுங்கள்.. திருப்பூர் ஆட்சியரின் அறிவிப்பு இதோ..

நெசவாளர்களே.. குறைதீர் மையத்தை அணுகி உதவி பெறுங்கள்.. திருப்பூர் ஆட்சியரின் அறிவிப்பு இதோ..

திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு..

திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு..

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நெசவாளா்கள் தங்களது குறைகளை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 044-25340518 என்ற எண்ணில் குறைதீா் மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    தொலைபேசி எண், இணையதள முகவரிகள் மூலம் நெசவாளா்களர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைத்தறி நெசவாளா்களா்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயா்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்க்கவும், மேம்படுத்தவும், நெசவாளா்கள் நேரடியாக தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் இந்த நெசவாளர் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நெசவாளா்கள் தங்களது குறைகளை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 044-25340518 என்ற எண்ணில் குறைதீா் மையத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் முகவரியிலும் தங்களது குறைகளைப் பதிவேற்றம் செய்யலாம்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி