ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்ட விஏஓக்களுக்கு கலெக்டர் போட்ட ஸ்டிரிக்ட் கன்டிஷன்!

திருப்பூர் மாவட்ட விஏஓக்களுக்கு கலெக்டர் போட்ட ஸ்டிரிக்ட் கன்டிஷன்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

Tiruppur Today News | திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஏஓக்கள் ( கிராம நிர்வாக அலுவலர்கள்)  ரெவென்யூ இன்ஸ்பெக்டர் ( வருவாய் ஆய்வாளர்கள்) ஆகியோர்களுக்கு  மாவட்ட கலெக்டர் ஸ்டிட் கன்டிஷன் போட்டுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஏஓக்கள் (கிராம நிர்வாக அலுவலர்கள்) ரெவென்யூ இன்ஸ்பெக்டர் (வருவாய் ஆய்வாளர்கள்) ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்டிரிக்ட் கன்டிஷன் போட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

இதனால், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில்,  கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Tiruppur