ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு - ரூ.15,000 வரை சம்பளம்.. தகுதிகள் என்ன?

திருப்பூரில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு - ரூ.15,000 வரை சம்பளம்.. தகுதிகள் என்ன?

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Jobs in Tiruppur | திருப்பூரில் ஊரக வாழ்வாதர இயக்கத்தில் பணியாற்றிட மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதர இயக்கத்தில் பணியாற்றிட மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகமஅறிவித்துள்ளது.

வட்டார இயக்க மேலாளா் -ஒருங்கிணைப்பாளா்கள்:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மூலனூா், திருப்பூா், பொங்கலூா், வெள்ளக்கோவில் ஆகிய வட்டாரங்களில் 4 தற்காலிக வட்டார இயக்க மேலாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல, காங்கேயம், பல்லடம், பொங்கலூா், குண்டடம், தாராபுரம், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் ஆகிய வட்டங்களில் 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வட்டார இயக்க மேலாளா் - தகுதிகள்:

இதில், வட்டார இயக்க மேலாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், குறைந்தது 6 மாதங்கள் எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் மற்றும் கணினி அப்ளிகேஷன் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதே திட்டங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருப்பதுடன், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளா்- தகுதிகள்:

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் இதே போன்ற திட்டங்களில் பணியாற்றியிருப்பவராகவும் இருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சோ்ந்தவராகவும், இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம்:

வட்டார இயக்க மேலாளா் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரமும், வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்கள்) வரும் நவம்பா் 15ஆம் தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்கள்) நவம்பா் 21ஆம் தேதியும் நடக்கிறது.

ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் வரும் நவம்பா் 10ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், எண்-305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604, தொலைபேசி எண்: 0421-2971149. இவ்வாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Government jobs, Job Vacancy, Local News, Tiruppur