ஹோம் /திருப்பூர் /

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruppur District Unemployed youth Can Apply For The Scholarship | திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத, படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இதுவரை 3 மாதத்துக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதந்தோறும் அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, மாற்றுத்திறனாளிக்கு மாத உதவித்தொகையாக 600 ரூபாய், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மாற்றுத்திறனாளிக்கு 600 ரூபாய், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க :  பயிர் காப்பீடு செய்துவிட்டீர்களா? - திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பிப்பவர்கள் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை 5 ஆண்டு தொடர்ந்து புதுப்பிப்பவர்கள், மாற்றுத்திறனாளி என்றால் பதிவு செய்து ஓராண்டு முடித்தவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் 2022-23ம் ஆண்டுக்கான சுயஉறுதி மொழி ஆவணத்தை வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruppur