Home /tiruppur /

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி!

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி!

திருப்பூர் பஞ்சலிங்க அருவி

திருப்பூர் பஞ்சலிங்க அருவி

Tiruppur Panchalinga Water Falls | திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதால் உடலும் - உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால் இந்த அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருவது வழக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் இந்த அருவிக்கு நீராதாரமாக இருக்கிறது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

வனப்பகுதியில் பாய்ந்து வரும் பல்வேறு ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேருகின்றன. இந்த அருவியில் விழும் தண்ணீர் சுவையுடன், மூலிகை குணத்தையும், நறுமணத்தையும் கொண்டு இருக்கும். இந்த அருவியில் குளிப்பதால் உடலும் - உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால் இந்த அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமாக இருந்தது. அடிக்கடி காட்டாற்று வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அவ்வப்போது கோவில் நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அருவியில் தண்ணீரின் அளவு குறைந்து சீராக கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்தோடு பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதற்கிடையே, அசம்பாவிதங்களை தவிர்க்க அருவிக்கு வரும் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி