ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்... தகுதி, சம்பளம் என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்... தகுதி, சம்பளம் என்ன?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Tiruppur News | திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

மேற்கண்ட பணிகளுக்கு மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பட இருக்கின்றன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார இயக்க மேலாளர் பணி:

காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு, 6 மாத MS Office சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பாலினம் - பெண்

வயது : 01.07.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : 15,000 ரூபாய்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி:

காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு, 6 மாத MS Office சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பாலினம் - பெண்

வயது : 01.07.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : 12,000 ரூபாய்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு 75 மதிப்பெண்களுக்கும், நேர்முகர்தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பேச்சுத் திறன் மிக்கவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022110328.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அனுப்ப வேண்டிய முகவரி :

இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/ மகளிர் திட்டம், No. 305, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் – 641604

தொலைபேசி எண் - 0421 2971149

விண்ணப்பிக்க கடைசி தேதி (நாளை) : 10.11.2022

Published by:Suresh V
First published:

Tags: Government jobs, Local News, Tiruppur