சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மின்னணு கழிவுகள் இருந்துவருகின்றன. ஆண்டுக்காண்டு சேர்ந்து கொண்டிருக்கும் மின்னணு கழிவுகளை அகற்றுவது மிகப் பெரிய சவாலான பணியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அபாயகரமான இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு முயற்சிகள் நடந்தாலும், அதன் தேக்கத்தால் உருவாகும் சூழலியல் பிரச்சினைகள் முக்கிய விவாத பொருளாகவே உள்ளன.
இந்தியாவில் 70 சதவீத மின்னணு கழிவுகள் எரிக்கப்படுகிறன அல்லது புதைக்கபடுகின்றன. மின்னணு கழிவுகளை புதைக்கிறபோது நிலத்தடி நீர் வளமும், மீத்தேன் வாயுவும் குறைகின்றன. எரிக்கிறபோது 25 மடங்கு அதிகமான கார்பன் டையாக்ஸைட் வெளிப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்னணு கழிவுகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் ஒருசேர சேகரிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புறவாளன் அமைப்பு மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம் சிறப்பு முகாமாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடு, அலுவலகம், பள்ளிகளில் பயன்படுத்தப்படாத மின்னணு சாதனங்களான கணினி, மொபைல் போன், பேட்டரி, மின்னணு உதிரி பாகங்கள் போன்றவற்றை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துக் கொண்டு பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்வதோடு இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை இன்று மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirupur