Home /tiruppur /

சீயான் விக்ரமின் கம்பேக் திரைப்படமா கோப்ரா? - திருப்பூர்வாசிகளின் ரிவ்யூ

சீயான் விக்ரமின் கம்பேக் திரைப்படமா கோப்ரா? - திருப்பூர்வாசிகளின் ரிவ்யூ

திருப்பூர்வாசிகளின்

திருப்பூர்வாசிகளின் கோப்ரா ரிவ்யூ

Tiruppur Cobra Review | இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் குறித்து திருப்பூர்வாசிகள் தெரித்த கருத்துக்களை காண்போம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur | Tiruppur
3 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் ’கோப்ரா’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. கடைசியாக விக்ரம் நடித்த மஹான் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள கோப்ரா படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர். மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகி உள்ளது. விக்ரம் படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக இது கூறப்படுகிறது. கோப்ரா படத்தில் விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மிர்னாளினி ரவி போன்றோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கிய விதத்தில் அவருடைய உழைப்பு தெரிந்தாலும் இந்த கதையை இவ்வளவு நீளமா சொல்லனுமா என்று அனைவரையும் சீட்டில் நெளிய வைக்கிறது.

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா


படத்திற்கு பெரிய மைனஸ் படத்தின் நீளம் தான். இயக்குனர் படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இந்தக் கோப்ரா கச்சிதமான படமாக அமைந்திருக்கும் ஆனால் அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்ல வேண்டும் என்பதற்காக மூன்று மணி நேரம் வேணாம் வேணாம் என்று சொல்லுமளவிற்கு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் சற்று சறுக்கலை சந்தித்து உள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா


திருப்பூரை பொருத்த அளவில் மங்கலம் சாலையில் உள்ள டயமண்ட் திரையரங்கு, முருங்கம்பாளையம் சரண் சினிமாஸ், பல்லடம் சாலையில் உள்ள தமிழ்நாடு சினிமாஸ், சத்யா காலனியில் உள்ள ரேவதி திரையரங்கு, ராக்கியபாளையம் சாலையில் உள்ள சினி பார்க் என நான்கு தியேட்டர்களில் இந்த கோப்ரா படம் வெளியாகி இருக்கிறது. விக்ரமின் கம்பேக் படமாக கோப்ரா அமையுமா என திருப்பூர் தமிழ்நாடு சினிமாஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்திருந்த திருப்பூர்வாசிகளிடம் கேட்டபோது, பல்வேறு கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விக்ரம் நடிப்பை புழந்ததுடன், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி போன்றோரின் நடிப்பையும் புகழ்ந்துள்ளனர். படத்தின் நீளம் அதிகமாக இருப்பது என்பதே பலரும் குமுறலாக தெரிவித்தது. இருப்பினும் படத்தின் நீளத்தை தற்போது படக்குழு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published:

Tags: Actor Vikram, Local News, Tiruppur

அடுத்த செய்தி