Home /tiruppur /

திருப்பூரில் ஒரு வடமாநில கிராமம்.. வந்தாரை வாழ வைத்த திருப்பூர்வாசிகள்.. 5,000 வடமாநிலத்தவர் வசிக்கும் பரமசிவம்பாளையம்..

திருப்பூரில் ஒரு வடமாநில கிராமம்.. வந்தாரை வாழ வைத்த திருப்பூர்வாசிகள்.. 5,000 வடமாநிலத்தவர் வசிக்கும் பரமசிவம்பாளையம்..

வடமாநிலத்தவர்

வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் திருப்பூர் கிராமம்..

North Indians Village in Tiruppur : திருப்பூர் பெருமாநல்லூர் அருகே உள்ள பரமசிவம்பாளையம் கிராமத்தின் சுற்றிலும் 5000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வந்தாரை வாழவைக்கும் ஊர் என்ற பெருமையை தொழில் நகரமான திருப்பூர் பெற்றுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூரையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக நாடி வருகின்றனர். படித்தவர், படிக்காதவர் என்ற எந்தவித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் தகுதிக்கேற்ப வேலை வழங்கும் விதமாக திருப்பூர் மாநகரம் உள்ளது.

கடந்த சில வருடங்களாக வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை திருப்பூர் மாநகரில் அதிகரித்துள்ளது.  5 வருடங்கள், 10 வருடங்கள் என இங்கேயே தமது குடும்பத்தினருடன் தங்கி பனியன் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் திருப்பூர் கிராமம்..


இவர்களில் அதிகப்படியானோர் வறுமையின் காரணமாகவே புலம்பெயர் தொழிலாளர்களாக திருப்பூருக்கு வந்துள்ளனர். ஒடிசா பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள், குடும்ப செலவிற்காக தங்களது குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாமல் வேலைக்கு அனுப்புகின்றனர்.

வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் திருப்பூர் கிராமம்..


திருப்பூரில் ஆங்காங்கே வட மாநில தொழிலாளர்கள் தனியாகவும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம் பாளையம் கிராமத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் திருப்பூர் கிராமம்..


இவர்களின் பெரும்பாலானோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக சுற்றியுள்ள பனியன் நிறுவனங்களையும் அதனை சார்ந்த தொழில்களையுமே நம்பி உள்ளனர். திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த நேதாஜி அப்பேரல் பார்க் கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும் அதனை சார்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.

தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள்..


தென்மாவட்டங்கள் வட மாநிலங்கள் வெவ்வேறு நாடுகள் என்று பலதரப்பட்ட மக்கள் நேதாஜி அப்பரல் பார்க்கை சார்ந்தே உள்ளனர். பெருமாநல்லூர் சுற்றியுள்ள கிராமங்களான நியூ திருப்பூர், பரமசிவன் பாளையம் ,பலங்கரை திருமுருகன் பூண்டி ஆகிய சுற்றுவட்டாரங்களில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வசித்து அவர்களின் குழந்தைகளையும் இங்கேயே படிக்க வைத்து தங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் திருப்பூர் கிராமம்..


இதைப் பற்றி வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 10 முதல் 15 வருடங்களாக திருப்பூரில் வசித்து வருகின்றோம். எங்களை வாழ வைத்தது தமிழ்நாடு தான் எங்கள் மாநிலங்களில் போதுமான வேலை வாய்ப்பின்மை காரணமாக நாங்கள் திருப்பூரை நாடி வரவிருந்தது. ஒரு காலகட்டத்தில் எங்கள் குடும்பங்களையும் ஊரையும் பிரிகிறோம் என்ற மன வருத்தத்துடன் இருந்தோம். இருப்பினும் அந்த கவலை எல்லாம் மறக்கும் விதமாக திருப்பூர் எங்களை வாழ வைக்கின்றது. இங்குள்ள மக்கள் அனைவரும் நட்புணர்வுடனும், சகோதரத்துவத்துடனும் பழகுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தாலும் எங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி