Home /tiruppur /

திருப்பூர் ஓய்வூதியர்கள் கவனத்திற்கு... நெருங்குகிறது நேர்காணல் காலக்கெடு.. உடனே முந்துங்கள்.. 

திருப்பூர் ஓய்வூதியர்கள் கவனத்திற்கு... நெருங்குகிறது நேர்காணல் காலக்கெடு.. உடனே முந்துங்கள்.. 

திருப்பூர்

திருப்பூர்

Tiruppur District Pensioners | ஓய்வூதியர்கள் நேர்காணல் செய்ய 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால் திருப்பூர் மக்கள் காலம் தாழ்த்தாமல் நேர்காணல் புரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாவட்ட கருவூலம் சார்பில் ஓய்வூதியதாரர்கள் சார்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கு உண்டான கால அளவு கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் வருகிற 30ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலை கருவூல அலுவலகங்கள் உள்பட) இதுவரை 2,508 ஓய்வூதியர்கள் வருடாந்திர நேர்காணல் புரியாமல் உள்ளனர். காலக்கெடு முடிய குறைவான நாட்களே உள்ளன.

எனவே ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு இதுவரை ஆண்டு நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்னணு வாழ்நாள் சான்றை, ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக இந்திய தபால்துறை வங்கி, இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம்.

மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க ஆதார் எண், பி.பி.ஓ எண், வங்கி கணக்கு எண், செல்போன் ஓ.டி.பி ஆகியவற்றைதெரிவிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி