ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் விவசாயிகள் பிரதமரின் கிசான் நிதி பெற உடனே இதை பன்னுங்க..!

திருப்பூர் விவசாயிகள் பிரதமரின் கிசான் நிதி பெற உடனே இதை பன்னுங்க..!

திருப்பூர்

திருப்பூர்

Tirupur Farmers Instructed To Do KYC To Get Prime Minister's Kisan Fund! | பிரதமரின் கிசான் நிதி  ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை என்று ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

பிரதமரின் கிசான் நிதி ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை என்று ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், 12வது தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க விவசாயிகளின் பட்டா சிட்டா, வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவைற்றை இணைத்து கேஓய்சி செய்து வேளாண்மை அலுவலங்கள், கூட்டுறவு வங்கிகள், இ- சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; சூறாவளியில் இருந்து வாழையை காக்கும் சவுக்கு மரங்கள் - இது தான் இங்கு விஷயமே!

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வங்கி கணக்கு எண்களை ஆதார் உடனும் கேஒய்சி செய்யாதவர்கள் பட்டியல் குறித்து வட்டார வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தக்கடவு கிராமத்தை சேர்ந்த 216 விவசாயிகளும், அணிக்கடவு 265, ஆத்துக்கிணத்துப்பட்டி 387, தொட்டம்பட்டி 129, குடிமங்கலம் 230, இலுப்ப நகரம் 165, கொண்டம்பட்டி 238, கொங்கல்நகரம் 227, கொசவம்பாளையம் 99, கோட்டமங்கலம் 294. கும்பம்பாளையம் 77, மூங்கில் தொழுவு 183, முக்கூடுஜல்லிபட்டி 115, பொன்னேரி 192,பெரியபட்டி 167, பண்ணைக்கிணறு 90, பூளவாடி 121, புதுப்பாளையம் 78, புக்குளம் 277, சோமவாரபட்டி 221, வடுகபாளையம் 211, வாகத்தொழுவு 147, வீதம்பட்டி 100, விருகல்பட்டி 125 என, மொத்தம், 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.

இதையும் படிங்க ; 100 நாள் பணியாளர்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் - திருப்பூர் தோட்டக்கலை துறை அறிவிப்பு

அதேபோல் ஏறத்தாழ, 1,300 விவசாயிகள், தங்களது நில ஆவணங்களான, சிட்டா, ஆதார் எண் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை, தங்களது கிராமத்திற்குட்பட்ட, உதவி வேளாண் அலுலர்களிடம் சரிபார்க்கும் பணிக்காக வழங்கவில்லை.

இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளதாவது:

பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும். நில ஆவணங்களின் நகல்களை வேளாண் உதவி அலுவலர்களிடம் கொடுத்து, சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் பதிவேற்றம் செய்யாமல், 4,389 விவசாயிகள் உள்ளனர்.எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் போன் எண் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவற்றை, அருகிலுள்ள, அரசு பொது சேவை மையம், தபால் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று, கண்டிப்பாக பதிவை புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பிக்கவில்லை என்றால், ஊக்கத்தொகை கிடைக்காது. எனவே புதுப்பிக்க தவறிய விவசாயிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். அதேபோல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 1,300 விவசாயிகள் நகல்கள் வழங்காமல் உள்ளதால் அப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி உதவி பெற ஆவணங்கள் புதுப்பித்தல் அவசியமாகும். வருமான வரி செலுத்தாத அரசுப்பணியாளர் அல்லாத விவசாய குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பி.எம்., கிசான் திட்டத்தில் பயன் பெற முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, தகுதியான அனைத்து விவசாயிகளும் இ.கே.ஒய்.சி., வழியாக ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண்ணை உடனடியாக புதுப்பித்து ஊக்கத்தொகையை தொடர்ந்து பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur