Home /tiruppur /

அரசு, தனியார் ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை- வரும் 25க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு, தனியார் ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை- வரும் 25க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசு, தனியார் ஐ.டி.ஐ கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூா் மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள ஐடிஐக்களில் சேர மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. ஏராளமான நலத்திட்டங்களையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது, மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த ஐடிஐ படிப்புகளில் சேர 8ம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயது வரையில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    மேலும், அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஆகவே, மாணவர்கள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டும்.

    இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0421-2230500 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி