Home /tiruppur /

நொய்யல் ஆற்றில் இறங்க கூடாது - திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

நொய்யல் ஆற்றில் இறங்க கூடாது - திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நொய்யல் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால், யாரும் ஆற்றில் இறங்க கூடாது என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. அப்போதே ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

    மேலும், பருவ மழையும் தொடர்ச்சியாக பெய்து வருவதால், உபரியாக நீர் ஆறுகளில் இருந்தும் மலைகளில் இருந்தும் வெளியேறி வருகிறது. தற்போது, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நொய்யல் ஆற்றில் நீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    மேலும், கோவை மாவட்ட சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து சுமாா் 750 கனஅடி வீதம் நீா்வரத்து உள்ளது. இந்த நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நொய்யல்
    ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், இதர தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

    பொதுமக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்கி செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள பொதுக்களுக்கு
    ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி