ஹோம் /Tiruppur /

செஸ் ஒலிம்பியாட்டை பிரபலப்படுத்த அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்ட லோகோ

செஸ் ஒலிம்பியாட்டை பிரபலப்படுத்த அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்ட லோகோ

ஒலிம்பியாட் லோகோ பேனர்

ஒலிம்பியாட் லோகோ பேனர்

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாக திருப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வரும் 28-ம் முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டு முதன் முறையாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கமான ஃபிடே (FIDE), ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்களில் இதுபோன்று நடத்தப்பட்டதில்லை.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதலாவது நாடு இந்தியா ஆகும். குறிப்பாக செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு உள்ள தொடர்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஜோதி தொடர் ஓட்டம், இனி எப்போதும் இந்தியாவிலிருந்தே தொடங்கி, போட்டி நடைபெறும் நாட்டை அடைவதற்கு முன்பாக அனைத்து கண்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி என்ற நிலையில் தமிழக அரசு இப்போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பர பதாகைகள், லோகோக்கள், மாரத்தான் போட்டிகள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அவ்வகையில் இதற்கான லோகோ, சதுரங்க குதிரை வடிவ தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், முக்கிய அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த லோகோ பொறித்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tirupur