அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு(unorganized sector workers) பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு e-SHRAM போர்ட்டலை கடந்த ஆகஸ்ட் 26, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான டேட்டாபேஸை (comprehensive database) உருவாக்க இந்த e-SHRAM போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்கவும் உதவும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் இ-ஷ்ராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது.
பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, நடைபாதை வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்படி அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள், இணையதளத்தில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் முகாம் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirupur