Home /tiruppur /

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாளை திருப்பூர் மாவட்டம் நாளை ( ஆகஸ்ட் 2ம் தேதி) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடப்பதால் பல்லடம் துணை மின் நிலையத்தில்  மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை ( ஆகஸ்ட் 2ம் தேதி) மாதாந்திர பாரமரிப்பு பணியின் காரணமாக பல்லடம் துணைமின் கீழ் வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் துணை மின் நிலையத்தின் கீழுள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகள், பழுது நீக்கப்பட்டும். அவற்றின் மீதுள்ள மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு சீரான மின் விநியோகம் செய்ய ஏதுவாக பாரமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை பல்லடம் துணை மின் நிலையத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின் தடை செய்யப்படும் பகுதிகள்: பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டம்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி