Home /tiruppur /

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palladam, India
    திருப்பூர் மாவட்டம் பல்லடம், பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக் கிழமை) 3ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம், பெருமாநல்லூர் மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்டம் பல்லடம், பெருமாநல்லூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்நிலையத்தினர் சார்பில், தெரிவித்துள்ளனர்.

    பெருமாநல்லூரில் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    கணக்கம்பாளையம் பீடர் ரோஜா கார்டன், பொடரம்பாளையம், செந்தில் நகர், பாலாஜி நகர், அம்பாள் நகர், தண்டாகவுண்டன் புதுார், காளிபாளையம் ஏ.டி., காலனி.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

    பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி