Home /tiruppur /

திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் துணை மின் நிலையங்களில் உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரபாளையம், கோல்டன் நகா், ஆா்.ஆா்வி.இ.நகா், கூலிபாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா்,
    செவந்தாம்பாளையம், நல்லூா், காளிப்பாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி
    நகா், ஐயப்பா நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

     
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி