Home /tiruppur /

வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு ரோட்டரி சங்கம் உதவி

வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு ரோட்டரி சங்கம் உதவி

ரோட்டரி கிளப் உதவி

ரோட்டரி கிளப் உதவி

திருப்பூரில் நியூஸ் 18 தமிழ் செய்தி எதிரொலியாக, பரமசிவம் பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச (ஆர்.ஓ) குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.

திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த பரமசிவம் பகுதியில் ஒரு கிராமம் முழுவதும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்களாகவே உள்ளனர்.

ஆறு மாதம் இங்கு பணிபுரிவது அடுத்த ஆறு மாதம் வேறு மாநிலத்திற்கு செல்வது என இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் என இங்கேயே தங்கி பணிபுரிந்து தனது குழந்தைகளையும் இங்கேயே படிக்க வைத்து இருக்கின்றனர்.

அப்படி வட மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் படிக்கும் பள்ளியாக திருப்பூர் பரமசிவம் பாளையம் தொடக்கப்பள்ளி உள்ளது. 30 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் சுமார் 26 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளாகவே உள்ளனர். பெரும்பாலானோர் வறுமையைக் குடும்ப பின்னணியை கொண்டுள்ளனர்.

வடமாநிலக் குழந்தைகளுடன் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள்


அவர்களின் பெற்றோரிடத்தில் பேசி குழந்தைகளுக்கு அடிப்படை பண்புகளையும் அடிப்படை கல்வியையும் கற்று உணர்த்த வேண்டும் என பள்ளி ஆசிரியர் சித்ரா தனது சொந்த முயற்சியால் மாணவர்கள் படிக்க உதவி செய்து வருகிறார்.

பள்ளி மாணவர்கள்


மேலும், இந்த மாணவர்களுக்கு அந்த ஊர் கிராம மக்கள், வார்டு கவுன்சிலர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் என அனைவரும் தங்களால் முடிந்த வரையிலான உதவியைச் செய்து வருகின்றனர்.

கழிவறையை சீரமைப்பது, குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்திற்காக சமையலறையை சீரமைப்பது, பள்ளி வகுப்பறை கட்டிடத்தை சீரமைப்பது, பள்ளிக்கு தேவையான நாற்காலி, மேசை போன்ற பொருட்களை வழங்குவது என ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அப்பள்ளிக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வழியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கம் சார்பில் நித்தியானந்தம் தலைமையில் பரமசிவம் பாளையம் அரசு ஆரம்ப பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி (ஆர். ஓ) வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட துணை ஆளுநர் பிரேமானந்தம், செயலாளர் வெங்கடேஷ், கருப்பண்ணன், ரமேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதுகுறித்து திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கம் தலைவர் நித்தியானந்தம் கூறுகையில், ’பள்ளிக்கு முதலில் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தரமான வகுப்பறை, தூய்மையான கழிவறை, சுகாதாரமான குடிநீர். அந்த நோக்கில் திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் சித்ரா மற்றும் வட மாநில மாணவர்களுக்கு இடையே ஆன புரிதல் வியக்க வைக்கின்றது. இன்னும் பல குழந்தைகளை இப்பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் அதற்காக எந்த உதவி வேண்டுமானாலும் ரோட்டரி சங்கத்தை நாடலாம் என்று அவர் கூறினார்.

ஆசிரியர் சித்ரா பேசுகையில், ’கல்வி அறிவை விட மாணவர்களுக்கு அடிப்படை அறிவும், பண்பும், சுகாதாரமும் முக்கியம் என்று நான் நினைக்கின்றேன். அந்த வகையில் இந்த மாணவர்கள் தினமும் சுத்தமாக குளித்து, தலைவாரி பள்ளியில் வந்து அமர்ந்தால் மட்டுமே போதும்; மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தேவையோ அவர்களுக்கு எந்த வழியில் என்னால் உதவி செய்ய முடியுமோ கல்வி கற்பிக்க முடியுமோ அவ்வாறு நேரம் காலம் பாராமல் உழைக்க நான் தயாராக உள்ளேன்.

எனக்கு தேவையான அனைத்தும் இந்த மாணவர்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சமுதாய பண்பு மட்டுமே என்றார். மேலும், எங்களது பள்ளி குறித்து செய்தி வெளியிட்டு அனைவரது கவனத்திற்கும் எங்களது பள்ளியினை கொண்டு சென்ற நியூஸ் 18 லோக்கல் தமிழ் ஊடகத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

மொழி என்பது கருத்தினை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு கருவி. கற்பித்தல் என்பது சிறந்த கல்வியையும் பண்புகளையும் ஒரு சிறந்த சமுதாயத்தையும் உருவாக்குவதற்கான ஊன்றுகோல். இந்த இரண்டையும் தனி ஒரு ஆசிரியராக ஒருசேர சிறப்பாக செய்து வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புரியும் விதமாக பாடம் எடுக்கும் ஆசிரியருக்கு அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களும், கிராம மக்களும் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி