முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு

திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு

கைது செய்யப்பட்ட பாண்டியம்மாள்

கைது செய்யப்பட்ட பாண்டியம்மாள்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் போலீஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சத்யாவை பிரசவத்திற்காக கடந்த 18ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு 19ஆம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று மாலை சத்யா உறங்கிய போது, அங்கு வந்த பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக்கொள்வதாகக் கூறி அவரது உறவினரிடம் இருந்து குழந்தையை வாங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தையுடன் அந்த பெண் அங்கிருந்து மாயமானார்.

இதையும் படிக்க : ஒருதலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு போலீசார் வலை..!

இது தொடர்பான புகாரில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரணையை தொடங்கினர். அதில், குழந்தையை பையில் மறைத்து வைத்து, பெண் வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் கடத்தப்பட்ட குழந்தையுடன் பதுங்கி இருந்த 43 வயதான பாண்டியம்மாளை போலீஸார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பாண்டியம்மாளுக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் ஆண் குழந்தையை திட்டமிட்டு கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Baby kidnaped, Crime News, Tiruppur