முகப்பு /செய்தி /திருப்பூர் / மருத்துவமனையில் புகுந்து ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண்.. 12 மணி நேரத்தில் கைது செய்த திருப்பூர் போலீசார்..

மருத்துவமனையில் புகுந்து ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண்.. 12 மணி நேரத்தில் கைது செய்த திருப்பூர் போலீசார்..

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் செரங்காட்டை சேர்ந்த கோபி - சத்யா தம்பதிக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் சிகிச்சையில் இருந்த வந்தனர். மேலும், அவர்களுடன் உறவினர் ஒருவர் உடன் இருந்தார்.  இந்நிலையில், சத்யா சிறிது நேரம் உறங்கினார். இதனால் குழந்தையை உறவினர் கவனித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் குழந்தையை தான் பார்த்துக் கொள்வதாக கூறி உறவினரிடம் இருந்து குழந்தையை வாங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தையுடன் அந்த பெண் மாயமானார்.

இதனால் சத்யாவின் உறவினர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் சத்யா கண்விழித்து  பார்த்து நடந்த சம்பவத்தை அறிந்துகொண்டார். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து புகாரளித்தனர். மேலும் புகாரின்பேரில் போலீசார் அங்கு வந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பெண் குழந்தையை பையில் மறைத்து வைத்து, வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையும் படிங்க : சிவகங்கையில் மற்றுமொரு கீழடியா? திருப்பாச்சேத்தி வைகை ஆற்றங்கரையோரம் உறைக்கிணறு கண்டுபிடிப்பு..!

இதையடுத்து, திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் குழந்தையுடன் பதுங்கி இருந்த பாண்டியம்மாள் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்ட போலீசார் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். 43 வயதான பாண்டியம்மாளுக்கு குழந்தை இல்லாததால் ஆண் குழந்தையை திட்டமிட்டு கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் புகுந்து குழந்தையை பெண் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Local News, Tiruppur