Home /tiruppur /

திருப்பூர் ஃபேஷன் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச ஆடை உற்பத்தி பயிற்சி

திருப்பூர் ஃபேஷன் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச ஆடை உற்பத்தி பயிற்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் நிப்ட் - டிஏ ஃபேஷன் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக கோர்ஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    கிராமப்புற இளைஞர்களுக்காக இலவசமாக ஆயத்த ஆடை உற்பத்திக்காக திருப்பூர் நிப்ட் டீ கல்லூரியில், மத்திய அரசின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின்(தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா) கீழ்  இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் மத்திய அரசின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய் திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம்.

    தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி முகவரி: நிப்ட்- டிஏ ஃபேஷன் கல்லூரி, முதலிப்பாளையம், திருப்பூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி