Home /tiruppur /

Tiruppur | உடுமலையில் நாளை எந்ததெந்த பகுதிகளில் மின் தடைதெரியுமா?

Tiruppur | உடுமலையில் நாளை எந்ததெந்த பகுதிகளில் மின் தடைதெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படவுள்ள இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நாளை (4-8-22) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடப்பதால், நாளை மின் தடை செய்யப்படுகின்றது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை உடுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளார்.

    மின்தடைபடும் பகுதிகள்: புஷ்பகிரி வேலன் நகா், சங்கா் நகா், காந்தி நகா்-2, போடிபட்டி, அண்ணா நகா், காமராஜ் நகா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, சுண்டாக்காம்பாளையம், இராகல்பாவி, குறிச்சிக் கோட்டை, புக்குளம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி