Home /tiruppur /

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்..

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perumanallur, India
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(புதன்கிழமை) 14 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா், பழங்கரை துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா்,
எம்.தொட்டிட் ப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க் , பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கை காட்டிபுதூா் ஒரு பகுதி, ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா்,

ஆா்.ஆா்டி.ஓ. ஆபீஸ், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி. வி. நகா், திருநீலகண்டா் வீதி,
நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷிவா்னி அவென்யூ
Published by:Karthick S
First published:

Tags: Local News, Power cut, Thanjavur

அடுத்த செய்தி