Home /tiruppur /

நாளை திருப்பூர் மாவட்டத்தில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா.!

நாளை திருப்பூர் மாவட்டத்தில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udumalaipettai | Veerapandi
    திருப்பூர் மாவட்டத்தில் வீரபாண்டி மற்றும் உடுமலை துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக் கிழமை) 1ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் வீரபாண்டி மற்றும் உடுமலை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9. மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி மற்றும் உடுமலை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்நிலையத்தினர் சார்பில், தெரிவித்துள்ளனர்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    வீரபாண்டி துணைமின் நிலையம்: தந்தை பெரியாா் நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள எம்.எஸ்.டையிங் பகுதிகள், ஆா்.ஆா்.டையிங் சுற்றியுள்ள பகுதிகள், நத்தகாடு தோட்டம் பகுதிகள்.

    உடுமலை துணை மின் நிலையம்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், சோமவாரபட்டி, ஆா்.பி.நகா், பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி