ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா? 

திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா? 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின்நிலையம், உடுமலை துணை மின்நிலையம் பகுதிகளில் நாளை (வியாக்கிழமை) 18ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின்நிலையம், உடுமலை துணை மின்நிலையங்களில் வியாக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

  ஆகையால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை மடத்துக்குளம் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளார்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமிபுதுார், அ.க.,புத்துார், எஸ்.கே.,புதுார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், என்.ஜி புதுார், குளத்துப்பாளையம், நல்லுார்.

  இதேபோல், உடுமலை துணை மின்நிலைய பகுதிகளில் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.

  மின்தடை ஏற்படும் பகுதிகள்:

  மானுப்பட்டி, கணபதிபாளையம், பி.ஏ.மில் பீடர், போடிபட்டி, அண்ணா நகர், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம்,ராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஜீவாநகர், அரசுக்கல்லுாரி, ராமசாமி நகர், யு.கே.சி., நகர், தீயணைப்பு

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Tiruppur