Home /tiruppur /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் இவை தான்..

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் இவை தான்..

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் இவை தான்..

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் இவை தான்..

Tiruppur District Power Shut Down Areas | திருப்பூர்  மாவட்டம் பொங்கலூா், எல்லப்பாளையம் புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில்  நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாவட்டம் பொங்கலூா், எல்லப்பாளையம் புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை வெள்ளிக்கிழமை(செப்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையும் படிங்க; திருப்பூரிலுள்ள முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் இதுதான் - அட இத்தனை பாடல்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் எவை என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை திருப்பூர் மாவட்டம் பொங்கலூா், எல்லப்பாளையம் புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

பொங்கலூா், காட்டூா் , தொட்டம்பட்டி , மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு
அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம்.

எல்லப்பாளையம் புதூா் துணைமின் நிலையம்: காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur, Tirupur

அடுத்த செய்தி