திருப்பூர் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது பின்னலாடை தொழில் நிறுவனம் தான். திருப்பூர் தற்போது ஸ்மார்ட் சிட்டியாகவும் மாறி வருகிறது. சிறிய மாவட்டமாக திருப்பூர் இருந்தாலும் இங்கு பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்குள்ள சுற்றுலா தலங்களை குறித்து பார்க்கலாம்.
திருப்பூர் குமரன் சிலை:
திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் காவலர்களால் லத்தியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆனால் உயிர் துறந்த பின்னரும் இந்திய தேசிய கொடியை கைகளில் இறுக்கமாக பிடித்தபடி இருந்தார். அந்த மகா தியாகி மற்றும் சிறந்த தேச பக்தரின் நினைவாக திருப்பூரில், 'திருப்பூர் குமரன் சாலை' என்ற மிக அகல மற்றும் நீளமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பாளையம் ஏரி:
திருப்பூர் நகரத்தின் வெகு அருகாமையில் உள்ள ஆண்டிப்பாளையம் என்ற ஊரில் இந்த ஏரி அமைந்துள்ளது. குடும்பத்துடன் ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இது விளங்குகிறது. படகு சவாரி வசதி இருப்பதால், சுற்றுலா வரும் மக்களை அதிகம் கவரும் இடமாகவும் இது உள்ளது.
சிவன் மலை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன் மலை அமைந்துள்ளது. முருகப்பெருமான் இங்கு எளுந்தருளியுள்ளார். மலை அடிவாரத்திலிருந்து கட்டப்பட்டுள்ள 450 படிகளில் ஏறிச் செல்லவேண்டும். இக்கோவிலை வந்தடைய சாலைப் போக்குவரத்து வசதிகள் உண்டு.
பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி:
உடுமலைப்பேட்டை அருகே பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த இடம் தியானம், நீர்வீழ்ச்சி, கோவில் மற்றும் அணைக்கு பிரபலமானது. இந்த அருவியிலிருந்து வெறும் 3 கிமீ தொலைவில் குறிப்பிடத்தக்க திருமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் கோயிலும் உள்ளது. இது 5 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்க, நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
முதலைப் பண்ணை அமராவதி சாகா்:
கி.பி 1976-ம் ஆண்டில் அமராவதி சாகா் முதலைப் பண்ணை அமைக்கப்பட்டது. முதலைகளைப் பிடித்து பாதுகாக்கப்படும் இந்தியாவின் மிகப்பொிய முதலைப் பண்ணை இது. திருப்பூாிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக வரவேண்டும். அமராவதி அணைக்கட்டு உள்ள இடத்திற்கு ஒரு கி.மீ முன்னால் உள்ளது. சூாிய ஒளியில் சுகமாக குளித்து மகிழும் பலவித அளவு கொண்ட முதலைகளை இங்கே காணலாம்.
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்
மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1,400 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். 958 சதுர கி.மீ பரந்து விாிந்துள்ள இந்த சரணாலயத்தில் 387 சதுர கி.மீ பரப்பு திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அமராவதி வனப்பகுதியும், ஆனைமலைக்காடுகளின் பகுதியும் திருப்பூா் மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.
அமராவதி அணை:
திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது. உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த செங்குத்தான அணையினால் 9.31 கி.மீ பரப்பும், 33.53 மீட்டா் ஆழம் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.
திருமூா்த்தி அணை:
ஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. பாலாறு, ஆழியாற்றின் கிளை நதியாகும். ஒழுங்கு அமைவுடன் 128 அடி உயரம் கொண்டது.
திருப்பூர் திருப்பதி :
திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் திருப்பூர் திருப்பதி கோவில் ஆகும். திருப்பூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலைப் போன்றே இக்கோவில் அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur