Home /tiruppur /

திருப்பூரிலுள்ள முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் இதுதான் - அட இத்தனை பாடல்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

திருப்பூரிலுள்ள முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் இதுதான் - அட இத்தனை பாடல்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

திருப்பூர் படப்பிடிப்பு தளம்

திருப்பூர் படப்பிடிப்பு தளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கல்லாபுரம் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக உள்ளது. இங்கே ஏராளமான பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Udumalaipettai, India
    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையோரம் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது ஆழகும் பசுமையும் நிறைந்த கல்லாபுரம். இந்த ஊர் கி.பி 13-ம் நூற்றாண்டில் விக்கிரமசோழன் பெயரைக் குறிக்கும் வகையில், ‘விக்கிரமசோழநல்லூர்’ என்றும் கல்லாபுரம் அழைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கல்லாபுரம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊரை ஒட்டி 1957-ம் ஆண்டு அமராவதி அணை கட்டப்பட்டது. 90 அடி ஆழமும் சுமார் 10 கி.மீ சுற்றளவு, 4 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது இந்த அணை.

    கல்லாபுரம் படப்பிடிப்பு பகுதி


     

    கல்லாபுரத்தில் உள்ள ராஜவாய்க்கால்கள்(பழைய வாய்க்கால்) மூலமாக ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் பாசன வசதி நடைபெற்று வருகிறது.

    கல்லாபுரம் படப்பிடிப்பு பகுதி


    அமராவதி பாசனம் மூலமாக, ஆண்டுக்கு 2 முறை நெல் நடவு நடைபெற்றுவரும் கல்லாபுரம் பகுதி எப்போதும் பசுமையாக காணப்படும்.

    கல்லாபுரம் படப்பிடிப்பு பகுதி


    இங்கே சுமார் 10 அடி உயரத்தில் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தூண்களால் தாங்கியபடி செல்லும் நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் காணப்படுகிறது. ஆனால் அது பாலம் அல்ல பாசனத்துக்கு நீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால் (கல் வாய்க்கால்) ஆகும். இது தரைமட்டத்தில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கேற்ப உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. வலது கரைகள், வாய்க்காலின் கீழ் பாகம் என அனைத்தும் கற்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இன்றளவும் நீர் கசிவு இல்லை.

    கல்லாபுரம் படப்பிடிப்பு பகுதி


    கல்லாபுரத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காக இவ்வாறு தரைமட்டத்தில் இருந்து உயரமாகவும், பின்னர் சமதளத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலின் கீழும், இடது மற்றும் வலது புறமும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்களும், உயர்ந்த மலைகளும் தென்படுகின்றன.

    கல்லாபுரம் படப்பிடிப்பு பகுதி


    இந்த அழகிய கிராமத்திலும், அங்குள்ள பாறைகளிலும், இந்த வாய்க்கால் தூண்களுக்கு இடையிலும் ஏராளமான படக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

    கல் வாய்க்காலில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள்:

    மாயி படத்தில், ‘நிலவே வானிலவே வாநிலவே வார்த்தை ஒன்று பேசு..’ என்ற பாடலில், சரத்குமார் ஒரு பாலத்தின் மீது நடந்து செல்வதைப் போலவும், அதன் கீழே மீனா நின்று பாடுவதைப்போலவும் எடுக்கப்பட்ட காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டது.

    கல்லாபுரம் படப்பிடிப்பு பகுதி


    இதேபோல, விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படத்தில், வரும் ‘மைனாவே மைனாவே’ என்ற பாடலில் பாலத்தின் மீது மஞ்சை உடையில் தோன்றும் காட்சியும் இங்கே எடுக்கப்பட்டதுதான். தனுஷ் நடித்த கொடி படத்தில் வரும் ‘ஏய் சுழலி அழகே’ பாடல் காட்சி இங்கே படமாக்கப்பட்டது.

    கற்பாறை மீது வரும் பாடல் காட்சிகள்!

    சின்னஜமீன் படத்தின் ‘வண்ணாத்திப் பூ பாறையிலே’ பாடலும், குஷி படத்தின் ‘மேகம் கருக்குது’ பாடலில் ஜோதிகா ஆடும் சில காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டன. அதேபோல, விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ‘ரத்தத்தின் ரத்தமே’ பாடல் காட்சி, அழகிய தமிழ் மகன் படத்தில் வரும் ‘மதுரைக்கு போகாதடி’ பாடலின் சில காட்சிகள் இங்குதான் படம் பிடிக்கப்பட்டன. அரண்மனை படத்தின் ‘கத்தி பார்வை காரி’ பாடல், இதே போல இது கதிர்வேலன் காதல், நெஞ்சுக்கு நீதி, ஜில்லா, வெற்றிவேல், விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா, என்புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வரும் சில காட்சிகள் இங்கதான் படமாக்கப்பட்டன.

    திருப்பூர், உடுமலைப்பேட்டை, அமராவதி அணை பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கும் ஒரு விசிட் அடிக்கலாம். இந்த ஊரின் அழகு உங்கள் நினைவில் பசுமையாக தாங்கும், மன பாரம் குறைந்து இலகுவாகும். பசுமையான வயல்வெளியும், மலைகளின் அழகும் கண்களுக்கு விருந்தாக அமையும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி