Home /tiruppur /

திருப்பூரில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறைக்கு ஆட்சியர் விதித்த கண்டிஷன்

திருப்பூரில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறைக்கு ஆட்சியர் விதித்த கண்டிஷன்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விடுவதற்கு ஆட்சியர் கண்டிஷன் விதித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு திருவோண தினத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களும் குஷியாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு சில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கன்டிஷனும் இருக்கிறது.

    கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் ஓணம் பண்டிகை கேரளாவில் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை (செப்டம்பா் 8) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை யை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வரும் வியாழக்கிழமை ( செப்டம்பா் 8) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்குப் பதிலாக வரும் செப்டம்பா் 17 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்.

    திருப்பூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களா்ளுடன் செயல்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி