Home /tiruppur /

திருப்பூர் விவசாயிகளுக்கு... சோலார் பம்ப் செட்களை மானியத்தில் பெறும் வழிமுறைகள்

திருப்பூர் விவசாயிகளுக்கு... சோலார் பம்ப் செட்களை மானியத்தில் பெறும் வழிமுறைகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Tiruppur | சூரிய மின்சக்தியில் இயங்கும் பப்ப் செட் அமைக்க மானியம் வழங்கப்படுவது குறித்து திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சோலார் மூலம் இயங்க கூடிய பம்ப் செட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

    இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்றும் பார்க்கலாம்.

    தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் முதல்வரின் சூரிய சக்தி பம்ப் செட்டுட்கள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத் திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசு மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2,000 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுட்கள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்துக்கான கிணறுகள் நில நீா் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருக்க வேண்டும்.

    இதர பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் இயந்திரம் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுட்களை நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளிக்க வேண்டும்.

    வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீா் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் கான்கிரீட் காரை இடைப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.

    மேற்கண்ட தொலைவுக்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப் பணித் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். இதில், ஆதிதிராவிடா் மற்றும்
    பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

    கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் திருப்பூா்: 99427-03222, உதவி செயற்பொறியாளா் தாராபுரம்: 79040-87490, உதவி செயற்பொறியாளா் உடுமலை: 98654-97731 ஆகியோரை தொடா்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி