Home /tiruppur /

திருப்பூர் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - காரணம் இதுதான்

திருப்பூர் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - காரணம் இதுதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஓணம் பண்டிகையை (Onam festival) முன்னிட்டு செப்டம்பர் 8ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    ஓணம் பண்டிகை(Onam festival) கேரளாவிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மற்றும் தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்க, திருமால் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் கேட்டதாகவும் அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைந்ததைத் தொடர்ந்து, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து மகாபலியின் ஆணவத்தை அழிக்க முற்பட்டார்.

    அப்போது மகாபலி சக்கரவர்த்தி, ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்ற வாமனர், அவருக்கு அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை திருவோணத் திருநாளாகவும், கேரள புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

    அதன்படி, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஒட்டி கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிப்பர்‌‌. கொல்ல வர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 8ஆம் தேதி ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவித்துள்ளார். அன்று பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும், கருவூலம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் குறைந்த அளவு பணியாளர்கள் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி