Home /tiruppur /

3 ஆண்டுகளாக தொடரும் ஸ்மார்ட் சிட்டிப் பணிகள்: போக்குவரத்து நெரிசலில் திணரும் திருப்பூர்

3 ஆண்டுகளாக தொடரும் ஸ்மார்ட் சிட்டிப் பணிகள்: போக்குவரத்து நெரிசலில் திணரும் திருப்பூர்

வாகன நெருக்கடியில் திருப்பூர்

வாகன நெருக்கடியில் திருப்பூர்

திருப்பூர் காமராஜர் ரோட்டில் உள்ள மேம்பாலத்திற்கு அருகில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  பாதசாரிகள் சாலையை கடக்க முடிவதில்லை.சாலை ஓர வியாபாரிகளுக்கு இட நெருக்கடியாகவும் உள்ளது.இதனால் பேருந்து நிலையத்தின் கட்டுமா

மேலும் படிக்கவும் ...
tதிருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மார்க்கெட் வளாகம், நொய்யல் கரை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் நகரின் முக்கிய இடமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை திருப்பூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வாரமாக திருப்பூரில் மழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் பள்ளங்களாகி சேரும் சகதியுமாக காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அது மட்டுமின்றி மழைக்காலங்களில் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றது.

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்


 

பேருந்து நிலையத்திற்கு உள்ளே உள்ள கடைகள் அனைத்தும் தற்பொழுது சாலையோர கடைகளாக மாறிவிட்டன. மேலும், பழைய அரசு மருத்துவமனை இருந்த இடமும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்பொழுது திருப்பூர் பேருந்து நிலைய சாலைகள் முழுவதும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணி


குறிப்பாக மாலை, இரவு நேரத்தில் கோவில்வழி பேருந்து நிலையத்தில் நிற்கும் தாராபுரம், பழநி, ஒட்டன்சத்திரம் பேருந்துகள் ரவுண்டானா அருகே இடதுபுறத்தில் நிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே, கொடுவாய், காங்கயம், சிட்கோ செல்லும் பேருந்துகள் ரவுண்டானா அருகே நிறுத்தப்படும் நிலையில், வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. பல்லடம் சாலையிலிருந்து இருந்து காமராஜர் சாலை வந்து தாராபுரம் சாலை திரும்பும் வாகனங்கள், குமரன் சாலை, முனிசிபல் ஆபீஸ் வீதி, காமராஜர் சாலை வழியாக வந்து தாராபுரம் சாலை வழியாக திரும்பும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற நிலையில் சாலையோர வியாபாரிகள்


இது தவிர, ரவுண்டானாவை சுற்றித் திரும்ப முயற்சிக்கும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்பகுதியில் இருக்கும் இக்கட்டான இடத்தில், வரிசை கட்டி பேருந்துகள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் சாலையை கடக்கவும், பேருந்தில் ஏறவும் தடுமாறுகின்றனர். குறுகிய இடத்தில் டூவீலர், கார்கள் வேகமெடுப்பதால், நடந்து செல்வோர் மீது பின்னால் வந்து வாகனம் மோதி விடுமோ என்ற அச்ச உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர் நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மேலும் சாலை ஓரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு இது பாதுகாப்பு இல்லாத அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது. சரியான இடம் இல்லாததாலும் மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத சூழல் உள்ளதாகவும் போக்குவரத்து நெரிசலால் வியாபாரமும் சரியில்லாததாகவும் சாலையோர வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நான்காண்டுகள் நடைபெற்ற வந்த கட்டுமான பணிகள் தற்பொழுது 85 % முடிவடைந்த நிலையில் பேருந்து நிலையம் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியுள்ளது. எனவே, ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிடுவதுடன், மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு நடத்தி பேருந்து நிலையத் திறப்புக்கு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். தற்காலிகமாக பேருந்துகள் நிறுத்த மாற்று இடம் வழங்க வேண்டும். இடையூறுகள் தொடரும் பட்சத்தில் விபத்து தவிர்க்க முடியாததாகி விடும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி