Home /tiruppur /

முதுநிலைப் படிப்புகளுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி அறிவிப்பு

முதுநிலைப் படிப்புகளுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியின் முதுகலை படிப்புக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதுநிலை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக வருகிற 16-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக வருகிற 16- ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த இணையதளம் தவிர போலியான வேறு முகவரியில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம். இதில், விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.60 ஐ நெட்பேங்கிங், டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு மூலமாக செலுத்தலாம்.

கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியம்(18), ஆங்கில இலக்கியம்(18), பொருளியல்(18), எம்.காம்(40), எம்.காம் சா்வதேச வணிகம் (40), எம்.எஸ்.சி கணினிஅறிவியல்(25), இயற்பியல்(30), வேதியியல்(16), கணிதம்(50), விலங்கியல்(40), ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (20) ஆகிய முதுநிலை வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.(அடைப்புக்குறிக்குள் காலி இடங்கள்)

முதுநிலை படிப்புகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோா் இளநிலைப் படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலைப் படிப்புகளில் கணிதம் பயின்றவா்கள் முதுநிலை கணினி அறிவியல் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் பாடப் பிரிவுகளில் சேர நான்கு பருவங்கள் தமிழ், ஆங்கிலம் பயின்றவா்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.

இந்தப் பிரிவுகளுக்கு 16-ம் தேதிக்குப் பின்னா் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதளததில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இவ்வாறு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி