Home /tiruppur /

Tiruppur | அகில இந்திய தொழில் தேர்வு -தனித்தேர்வர்கள் 12ம் தேதிக்குள் விண்ணக்கவும்

Tiruppur | அகில இந்திய தொழில் தேர்வு -தனித்தேர்வர்கள் 12ம் தேதிக்குள் விண்ணக்கவும்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்கள் வருகிற 12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்கள் வருகிற 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ்அகில இந்திய தொழிற்பயிற்சி தேர்வு 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும். அகில இந்திய தொழிற் பயிற்சி தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    முதல் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐயில் படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் மற்றும் தொழிற்பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

    2-வது பிரிவில் திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் படித்த செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

    3-வது பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். 4-வது பிரிவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தொழிற்பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1048-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    2019-ம் ஆண்டில் மாநில தொழிற்பயிற்சி குழும திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அந்த தொழிற்பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    தகுதியுள்ள முதல், 3-வது, 4-வது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத்தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் அக்டோபர் மாதம் 11-ந் தேதியும், செய்முறைத்தேர்வு மறுநாள் 12-ந் தேதியும் சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

    கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே செய்முறைத்தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் 2-வது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் நடக்கும் அகில இந்திய தொழிற்தேர்வில் முதல் வருட தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    அதன்பிறகு நடக்கும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தியதற்கான செலான், கல்விச்சான்றிதழ் நகல், மற்ற ஆவணங்களின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்து வருகிற 12-ந் தேதிக்குள் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி