Home /tiruppur /

திருப்பூரில் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூரில் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டம் தாரபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையால், ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதன் காரணமாக, பல்வேறு இடங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். அப்போது அமராவதி அணை, பழனி சண்முகாநதி ஆகியவற்றில் இருந்து அதிக அளவு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், மழை நீரும் கலந்து
    வருவது தெரியவந்தது.

    இதன் காரணமாக தாராபுரம் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாராபுரம் ஈஸ்வரன் கோயில் ஆற்றுப்பாலம், பழைய ஆற்றுப்பாலம், அலங்கியம்
    ஆற்றுப்பாலம் ஆகிய பகுதிகளில் ஆற்று நீருடன், மழைநீரும் கலந்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று கரையோர கிராம மக்களுக்கு காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

    மேலும், ஈஸ்வரன் கோயில் ஆற்றுப் பாலத்தில் இரும்புத் தடுப்புகளை அமைத்துத் காவல் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி