Home /tiruppur /

விநாயகர் சதுர்த்தி: கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி: கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?

விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகள்

திருப்பூரில் விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

    விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகா் சிலைகளை அமைக்கும்முன் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து கடந்த 2018ல்
    அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆகையால், இதையடுத்து, சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முன் தொடர்புடைய துறைகளில் பெறப்பட வேண்டிய ஆட்சேபனையின்மை கடிதத்துடன் மாநகரப் பகுதிகளில் அந்தந்த உதவிகாவல் ஆணையா்களிடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களிடமும் படிவம் 1-ல் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

    பின்னர் சிலைகள் நிறுவப்பட வேண்டும். மேலும் நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இயற்கை வண்ணக் கலவை கொண்டு வண்ணம் பூசப்பட்டவைகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

    அதேவேளையில், சிலைகளை வைத்துத் வழிபாடு நடத்த  வருவாய் கோட்டாட்சியா், உதவி காவல் ஆணையா்களால் நிராகரிக்கப்படும்போது மேல்முறையீட்டு விண்ணப்பத்தை ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியருக்கும், மாநகரப் பகுதிகளில் காவல்ஆணையரிடமும் அளிக்க வேண்டும்.

    திருப்பூா் மாவட்டத்தில் பொது அமைப்புகள், பொதுமக்களால் நிறுவப்படும் சிலைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் கரைக்க தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

    சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம், பொங்கலூா், எஸ்.வி.புரம், கெடிமேடு, பிஏபி வாய்க்கால்கள், கணியூா் அமராவதி ஆறு, எஸ்.வி.புரம் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் கரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி