ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்காக உதவி மையம்

திருப்பூரில் உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்காக உதவி மையம்

உயர்கல்வி

உயர்கல்வி

Tiruppur | திருப்பூரில் உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வியைத் தொடர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  திருப்பூர் மாவட்டத்தில் உயர் கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவிடும் வகையில், ஆட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வி மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

  திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து, இதுவரை கல்லூரியில் சேராத 777 மாணவர்கள் உயர்கல்வியைத் தொடராதது கண்டறியப்பட்டுள்ளது.

  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததாலும், குடும்ப நிதி நிலை காரணமாகவும், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரிகளில் சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை உயர்கல்வி துறையினரால் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாய்ப்பை பயன்படுத்தி உயர்கல்வி தொடராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஆட்சியர் அலுவலத்தில் இதற்காக உதவி மையம் செயல்பட தொடங்கி உள்ளது.

  நள்ளிரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து திருட்டு - 6 பேரை கைது செய்த திருப்பூர் போலீஸார்

  இந்த மையத்தை பயன்படுத்தி உயர் கல்வி தொட முடியாத மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பாக உயர் கல்வி துறையினர்களையும் அணுகி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Tiruppur