முகப்பு /திருப்பூர் /

திருப்பூரில் 4-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மிஸ் பண்ணாதீங்க

திருப்பூரில் 4-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மிஸ் பண்ணாதீங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 4-ம் தேதி(வரும் ஞாயிற்று கிழமை), 35-ம் கட்ட மெகா தடுப்பூசி (கொரோனா தடுப்பூசி) முகாம் நடக்கிறது. அதன்படி, மாவட்டம் முழுதும், 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’திருப்பூர் மாவட்டத்தில், 12 முதல், 14 வயது வரை, 15 முதல், 18 வயது வரை இளம் சிறார்கள் மற்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், 35-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், செப்டம்பர் 4ஆம் தேதி நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட, 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல், 18 வயது பிரிவில், 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 வயது முதல் 14 வயது பிரிவில், 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் அல்லது 26 வாரம், கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இம்முகாமில் செலுத்தப்படும். இந்த பூஸ்டர் தடுப்பூசி, செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruppur