Home /tiruppur /

உடுமலை, மடத்துக்குளத்தில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள்- காவல்துறை முக்கிய அறிவிப்பு

உடுமலை, மடத்துக்குளத்தில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள்- காவல்துறை முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விநாயகர் சதுரத்தியை யொட்டி உடுமலை  மற்றும் மடத்துக்குளம்  பொது மக்கள் செய்ய வேண்டியது என்ன என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udumalaipettai, India
    விநாயகர் சதுரத்தியையொட்டி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பொது மக்கள் செய்ய வேண்டியது என்ன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 310 இடங்களில் சிலைகள் வைக்கப்படுவதால் செய்தால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் 310 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படவுள்ளது.

    ஹிந்து முன்னணி சார்பில், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், 260க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தவும், கலாச்சார விழாக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த இந்து முன்னணியினர் திட்டமிட்டுள்ளனர். வரும், செப்டம்பர் 2ம் தேதி உடுமலையிலும், 3ம் தேதி, மடத்துக்குளத்திலும் ஊர்வலம் நடைபெறவுள்ளது.

    அதே போல், இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பிலும், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 60க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள இடங்கள், விசர்ஜன ஊர்வலம் நடக்கும் சாலை உள்ளிட்டவை குறித்தும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும், ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் மற்றும் போலீசார் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ஹிந்து அமைப்புகளுக்கு பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதில், பாதுகாப்பான முறையில் சிலைகளை வைக்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும், பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விசர்ஜன ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உட்பட முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பின், விசர்ஜன ஊர்வலம் நடப்பதால், போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி