Home /tiruppur /

திருப்பூரில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுலவர் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

திருப்பூரில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுலவர் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் நிறுவனம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், நிறுவனம் சாராத குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர் (பெண்கள் மட்டும்), ஆற்றுப்படுத்துனர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

இது தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதை அடிப்படையாக கொண்டு அரசு பணி கோர முடியாது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்-633, 6-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0421 2971198 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி