முகப்பு /செய்தி /திருப்பூர் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதம்.. கோபுரத்தில் பதுங்கி இருந்த நபர் கைது

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதம்.. கோபுரத்தில் பதுங்கி இருந்த நபர் கைது

பிடிப்பட்ட சரவணன்

பிடிப்பட்ட சரவணன்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சியில் கோபுரத்தில் பதுங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயிலை இன்று அதிகாலை அர்ச்சகர்கள் திறந்த போது, வெளி பிரகாரத்தில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளில் இருந்த உடைகள் களையப்பட்டிருந்ததுடன், உண்டியல், சுற்றுச்சுவரில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகை சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

top videos

    அப்போது, கோயில் ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் பதுங்கியிருந்த ஒருவர் பிடிப்பட்டார். அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பதும், கோயிலில் இருந்த வெண்கல வேல் உள்ளிட்ட பொருட்களை திருடி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Temple, Theft