ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்

திருப்பூரில் நாளைய மின்தடை பகுதிகள்

திருப்பூரில் நாளைய மின்தடை பகுதிகள்

Tiruppur Power cut | திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி துணைமின் நிலையத்தில் நாளை (அக்டோபர் 28ம் தேத) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

வீரபாண்டி துணைமின் நிலையத்தில் ராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நொச்சிப்பாளையம் பிரிவு, முல்லை நகர், என்.எஸ்.கே. நகர், டி.கே.டி. மில் ரோடு, டி.வி., நகர், பாரியூர் அம்மன்நகர், ராயல் பார்க், ஆர்.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur