ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் இவை தான்.!

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் இவை தான்.!

திருப்பூர் - மின்தடை அறிவிப்பு..

திருப்பூர் - மின்தடை அறிவிப்பு..

Tiruppur Power Cut Areas | திருப்பூர்  மாவட்டம்  காங்கயம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (28-ம் தேதி)  (புதன் கிழமை)   மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (28-ம் தேதி - புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகாரமாக நாளை மின் தடை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் வாசிக்க: திருப்பூர் மக்கள் எளிய முறையில் வரி செலுத்த புதிய ஏற்பாடு

காங்கயம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் இடங்கள்:-

பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Power cut, Tiruppur