ஹோம் /திருப்பூர் /

Tiruppur | மழைக்காலங்களில் ஒதுங்க கூட இடமில்லை: பாதுகாப்பில்லாத சூழலில் சாலையோர வியாபாரிகள்

Tiruppur | மழைக்காலங்களில் ஒதுங்க கூட இடமில்லை: பாதுகாப்பில்லாத சூழலில் சாலையோர வியாபாரிகள்

திருப்பூர் சாலையோர வியாபாரிகள்

திருப்பூர் சாலையோர வியாபாரிகள்

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சாலையோர வியாபாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க கோரியும் தங்களுக்கு பேருந்து நிலையத்தினுள் கடைகளை வைக்க இடம் தரக்கோரியும்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மார்க்கெட் வளாகம், நொய்யல் கரை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் நகரின் முக்கிய இடமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை திருப்பூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வாரமாக திருப்பூரில் மழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் பள்ளங்களாகி சேரும் சகதியுமாக காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அது மட்டுமின்றி மழைக்காலங்களில் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றது. பேருந்து நிலையத்திற்கு உள்ளே உள்ள கடைகள் அனைத்தும் தற்பொழுது சாலையோர கடைகளாக மாறிவிட்டன.

புதிய பேருந்து நிலையப் பணி

மேலும், பழைய அரசு மருத்துவமனை இருந்த இடமும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்பொழுது திருப்பூர் பேருந்து நிலைய சாலைகள் முழுவதும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சாலையோர வியாபாரிகள்

மேலும் ,சாலை ஓரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு இது பாதுகாப்பு இல்லாத அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது. சரியான இடம் இல்லாததாலும் மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத சூழல் உள்ளதாகவும் போக்குவரத்து நெரிசலால் வியாபாரமும் சரியில்லாததாகவும் சாலையோர வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகள்

நான்காண்டுகள் நடைபெற்ற வந்த கட்டுமான பணிகள் தற்பொழுது 85 % முடிவடைந்த நிலையில் பேருந்து நிலையம் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியுள்ளது. மேலும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சாலையோர வியாபாரிகளுக்கு பேருந்து நிலையத்தில் உள்ளேயே கடைகளை வைக்குமாறு ஏற்பாடுகள் செய்து தரும்படி சாலையோர வியாபாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகள்

எனவே, ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிடுவதுடன், மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு நடத்தி பழைய பேருந்து நிலையத் திறப்புக்கு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு பேருந்து நிலையத்தின் உள்ளேயே வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக கடைகள் அமைத்து தர வேண்டும். இடையூறுகள் தொடரும் பட்சத்தில் இட நெருக்கடி காரணமாக விபத்து தவிர்க்க முடியாததாகி விடும்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur