முகப்பு /செய்தி /திருப்பூர் / மனதின் குரல் 100-வது பதிப்பைக் கேட்பதில் தகராறு... நடுரோட்டில் தாறுமாறாக சண்டையிட்ட பாஜகவினர்

மனதின் குரல் 100-வது பதிப்பைக் கேட்பதில் தகராறு... நடுரோட்டில் தாறுமாறாக சண்டையிட்ட பாஜகவினர்

தமிழ்நாடு பாஜக

தமிழ்நாடு பாஜக

நடுரோட்டில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் பாஜக நிர்வாகிகள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மங்களம் ரவி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவருக்கு பாஜகவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக பதவி கொடுக்கப்பட்டது. மங்களம் ரவிக்கும், பாஜக மாநில நிர்வாகியான கொங்கு ரமேஷ்க்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் ஞாயிறு அன்று ஒலிபரப்பனது. பிரதமர் மோடி 100 ஆவது தொகுப்பில் பேச இருப்பதை கேட்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக மங்களம் ரவி ஒரு இடத்தில் கூட்டம் கூட்டியுள்ளார்.

அதே போல் கொங்கு ரமேஷ் தனியாக மற்றொரு இடத்தில் நடத்தி உள்ளார். கொங்கு ரமேஷ் நடத்திய நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே, இருவருக்கும் இடையே மோதல் இருந்த நிலையில் இந்த விவகாரம் மங்களம் ரவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

உடனே மங்களம் ரவி தனது ஆதரவாளர்களுடன் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கொங்கு ரமேஷின் கடைக்கு சென்று தாக்கினார். அதைத்தொடர்ந்து,கொங்கு ரமேஷ் மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அமைப்பு செயலாளர் சங்கர் ஆகியோர் மங்களம் ரவியை நடுரோட்டில் வைத்து விரட்டி விரட்டி தாக்கினர்.

இதையும் வாசிக்க: பிபிஜி சங்கர் கொலை விவகாரம்: கொலையாளிகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சகோதரர் மனைவி

பாஜகவினர் நடுரோட்டில் தாக்கிக் கொண்டதை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பாஜகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    நடுரோட்டில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த குணசீலன், பாஜகவை சேர்ந்த ரமேஷ், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    First published:

    Tags: BJP