Home /tiruppur /

திருப்பூரில் ரூ. 75 லட்சத்துக்கு ஏலம் போன சூரிய காந்தி விதைகள்

திருப்பூரில் ரூ. 75 லட்சத்துக்கு ஏலம் போன சூரிய காந்தி விதைகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் சந்தையில் 111 டன் சூரிய காந்தி விதைகள் ஏலம் விடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலில் 75 லட்ச ரூபாய்க்கு சூரிய காந்தி விதைகள் ஏலம் செய்யப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமைகளில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு, வேடசந்தூா், வாணிக்கரை, அரவக்குறிச்சி, பாறைப்பட்டி, என்.ஜி.வலசு, நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்துக்கு, 187 விவசாயிகள் 2,275 மூட்டைகளில் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றின் எடை 111 டன் ஆகும்.

    கிலோ ரூ.58.69 முதல் ரூ. 71.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.67.14. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 75 லட்சம் ஆகும்.

    காரமடை, சித்தோடு, பூனாட்சி, நடுப்பாளையம், முத்தூா், காங்கயத்தில் இருந்து 13 வணிகா்கள் விதைகளை வாங்கி சென்றனர். விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி