திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்பட இருப்பதாகவும், ஆர்வம் உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பீா்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற கொடிக் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். இதனால், காய் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
ஆனால் இதற்கான செலவு அதிகம் என்பதால், பல விவசாயிகள் இத்தகைய பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் அதிகம். இந்நிலையில், விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தோட்டக்கலை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா் அட்டை நகர், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
Must Read :நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?
மேலும், விவரங்களுக்கு 7708330870, 9095628657, 8939263412 ஆகிய செல்போன் எண்களிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்தாா். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பலன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Local News, Tiruppur