ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்விஉதவித்தொகை

கல்விஉதவித்தொகை

Scholarship | திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

தொழிற்படிப்பு பயிலும், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு, சிறுவர்களுக்கான பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ஓராண்டுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு 30,000 ரூபாயும், மாணவிகளுக்கு 36,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நவம்பர் மாதம் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி எண் 0421 2971127 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வாய்ப்ப்பை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி, www.ksb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Scholarship, Tiruppur