ஹோம் /திருப்பூர் /

மாநில கல்வி கொள்கை - திருப்பூரில் நாளை கருத்து கேட்பு கூட்டம்

மாநில கல்வி கொள்கை - திருப்பூரில் நாளை கருத்து கேட்பு கூட்டம்

திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் கலெக்டர்

Tiruppur |மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் நாளை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு மாநில கல்வி கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது ஓராண்டில் மாநில கல்வி கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற முடிவு செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூரில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : பயிர் காப்பீடு செய்துவிட்டீர்களா? - திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழகத்துக்கு தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் கருத்து கேட்பு கூட்டம் நாளை 14ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த கருத்து கேட்பு கூட்டமானது மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. கருத்து கேட்பு கூட்டத்தில் கல்வியாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் நபர்கள் தங்களது கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து கூட்டத்தில் ஒப்படைக்கலாம். இந்த கருத்து கேட்பு கூட்டமானது திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, தாராபுரம் என்சிபி நகரவை மேல்நிலை பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur